பத்தனம்திட்டா: மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் நாளை முதல் சபரிமலை கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. தினமும் 30,000 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ள நிலையில் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாகும். 2 டோஸ் கொரோனா தடுப்பூசி சான்று அல்லது ஆர்டி-பிசிஆர் நெகட்டிவ் சான்று கட்டாயமாகும்.