சுயதொழில் தொடங்க விருப்பம் முள்ள எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் தாட்கோ திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப்பு:

“சுயதொழில் தொடங்க விருப்பம் உள்ள பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினத்தவர்கள் தாட்கோ திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

சென்னை மாவட்டத்தில் வசிக்கும் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினத்தவர் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் கீழ்க்கண்ட பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் பயனடைய தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது வரம்பு 18 முதல் 65 வரை. குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.2.00 லட்சம் ஆகும் இருக்க வேண்டும்.

1.தொழில் முனைவோர் திட்டம் மற்றும் பெட்ரோல், டீசல், எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைத்தல்.

2.இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் மருத்துவ மையம், மருந்தியல், கண் கண்ணாடியகம், முட நீக்கு மையம், ரத்த பரிசோதனை நிலையம் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல்.

3. சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி மானியம் திட்ட தொகையில் 50 சதவிகித பெறுவது.

பட்டியல் இனத்தவராக இருப்பின் http://application.tahdco.com பழங்குடியினராக இருப்பின் http://fast.tahdco.com என்ற தாட்கோ இணையதள முகவரியில் கீழ்காணும் ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

1.குடும்ப அட்டை அல்லது இருப்பிட சான்று

2. சாதி சான்றிதழ்

3.வருமானச் சான்றிதழ் ஓராண்டுக்குள் பெற்றிருக்க வேண்டும்.

4. ஆதார் அட்டை / வாக்காளர் அடையாள அட்டை

5.விலைப்புள்ளி GSTIN எண்

6. திட்ட அறிக்கை

7.ஓட்டுநர் உரிமம் வாகனக் கடனுக்கு மட்டும்

8.பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

9.கல்வித் தகுதி சான்றிதழ்

10.விண்ணப்பதாரர் கடன் கோரும் தொழிலில் முன்அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும். (முன் அனுபவச் சான்றிதழ்)

11. வங்கி கணக்கு புத்தகம் முதல் பக்க நகல். இவைகள் அனைத்தும் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை 24 மணி நேரமும் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகத்தை அணுகவும்.”

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

47 COMMENTS

  1. cialis ivermectin effetti collaterali These monkeys were once residents on an island off the coast of Florida near the Silver River clomiphene citrate According to the ACS, research has not shown a clear benefit from either regular self exams or those done by a practitioner

  2. I blog frequently and I truly thank you for your information. Thisarticle has truly peaked my interest. I will bookmarkyour blog and keep checking for new information about once per week.I opted in for your Feed as well.

  3. Hi, I do think this is an excellent blog. I stumbledupon it 😉 I may revisit yet again since i have book marked it. Money and freedom is the greatest way to change, may you be rich and continue to help others.

  4. baby boys rash guard shirts 5 arts crafts heat transfer paper industrial scientific metal bar grating 2 baby girls athletic outdoor 4 womens lingerie shapewear thigh slimmers 2 home kitchen bath linen sets 1 ericrac

  5. Thank you, I’ve recently been looking for information approximately this subject for a long time and yours is the greatest I’ve discovered so far. But, what concerning the conclusion? Are you certain in regards to the source?

  6. Xoilac Tv Thẳng Bóng Đá kèo nhà cái 1 chấm netĐội tuyển chọn futsal nước Việt Nam đã có một trận đấu đồng ý được trước đối thủ đầy sức mạnh Lebanon. Kết trái Bà Rịa-Vũng Tàu vs Bình Phước hôm nay 18h00 ngày 5/5, Hạng nhất nước Việt Nam.

  7. I just like the helpful information you provide on your articles.I’ll bookmark your blog and take a look at again here regularly.I am moderately certain I will learn lots of new stuff right righthere! Good luck for the next!

  8. Thanks for the good writeup. It if truth be told was a entertainment account it. Glance complex to more added agreeable from you! By the way, how could we keep in touch?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here