புதுச்சேரி மாநிலத்தில் 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. தடுப்பூசி செலுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 12 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறை இன்று (நவ. 26) வெளியிட்ட தகவலில், ”புதுச்சேரி மாநிலத்தில் 2,826 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 15, காரைக்காலில் 9, ஏனாமில் 3, மாஹேவில் 4 பேருக்கும் என மொத்தம் 31 பேருக்கு (1.10 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 825 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 59 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 262 பேரும் என மொத்தமாக 321 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,872 ஆகவும், இறப்பு விகிதம் 1.45 சதவீதமாகவும் உள்ளது. புதிதாக 28 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 632 (98.30 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 12 லட்சத்து 994 பேருக்கு (இரண்டாவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here