சிவகார்த்திகேயன் அடுத்து அட்லியின் உதவி இயக்குனர் அசோக் இயக்கும் படத்தில் நடிக்கிறார். சிங்கப்பாதை என்ற பெயர் இதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் சிங்கப்பாதை படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் அக்டோபர் 9 திரையரங்குகளில் வெளியாகிறது. தற்போது டான் என்ற படத்தில் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. அத்துடன் சயின்ஸ் பிக்ஷன் திரைப்படமான அயலானும் தயாராகி வருகிறது. 

சிவகார்த்திகேயன் அடுத்து அட்லியின் உதவி இயக்குனர் அசோக் இயக்கும் படத்தில் நடிக்கிறார். சிங்கப்பாதை என்ற பெயர் இதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் அவர் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அக்டோபரிலிருந்து படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்

சிங்கப்பாதை படத்தின் கேமராமேனாக டட்லி ஒப்பந்தமாகியுள்ளார். இவர் முக்கியமான இந்திப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலோ படங்களுக்கு இவர்தான் ஒளிப்பதிவு. கேஜேஆர் ஸ்டடியோஸ் சிங்கப்பாதையை தயாரிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here