பூஸ்டர் டோஸூக்கு ஏற்கனவே போடப்பட்ட தடுப்பு மருந்தை செலுத்த வேண்டுமா, அல்லது வேறு மருந்தை செலுத்த வேண்டுமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும் ராஜேஷ் பூஷண் கூறினார். 

பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள இணை நோய்க்கான சான்றிதழ் தேவையில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இக்கூட்டத்தில் தமிழக அரசு தரப்பில் மாநில பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், மாநில தடுப்பூசி திட்ட இணை இயக்குநர் வினய் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், இணை நோய் உள்ளவர்கள் அதற்கான சான்றினை சமர்ப்பிக்க வேண்டும் என்ற தவறான தகவல் பரவி வருகிறது என்றும், இணை நோயாளிகள் தங்கள் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ள மட்டுமே அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் கூறினாார்.

பூஸ்டர் டோஸூக்கு ஏற்கனவே போடப்பட்ட தடுப்பு மருந்தை செலுத்த வேண்டுமா, அல்லது வேறு மருந்தை செலுத்த வேண்டுமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும் ராஜேஷ் பூஷண் கூறினார்.