கோவை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், எம்எல்ஏவுமான அம்மன் கே.அர்ச்சுணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக உருவான காலம்முதல் கோவை மக்கள் ஆதரித்துவருகின்றனர்.

கடந்த சட்டப் பேரவை தேர்தலில், திமுகவுக்கு கோவை மாவட்ட மக்கள் வாக்களிக்க வில்லை என்பதால் அவர்களைகுசும்புக்காரர் என்று கொச்சைப் படுத்தி பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

50 ஆண்டுகால சாதனைகளை ஐந்தாண்டுகளில் கோவை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தி வரலாறு படைத்த எஸ்.பி.வேலு மணியை இந்த மாவட்ட மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள். இதற்காக எஸ்.பி.வேலுமணி மீது பொய் வழக்கு போடுவது,பழிவாங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை திமுக நிறுத்திக்கொள்ளவேண்டும். நாங்கள் அமைதியாக 100 மீட்டர் தூரம் நடந்து சென்றதற்காக வழக்குபோடுகிறீர்கள்.

ஆனால், ஆளும் கட்சி சார்பாக பல்லாயிரக்கணக்கான மக்களை ஓரிடத்தில் அமர வைத்தால் கரோனா வராதா? காலம்வெகுவிரைவில் பதில் சொல்லும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.