இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 43 பேரின் காவல் ஜனவரி 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது ஏமாற்றமளிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இலங்கை சிறையில் உள்ள 43 மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. மீனவர்களை உடனே விடுவிக்க, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த டிசம்பர் 19 மற்றும் 20 -ஆம் தேதிகளில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

5 COMMENTS

  1. zithromax for std The values are expressed as percentages of DNA fragmentation in drug plus 3 MA treated samples as compared to the samples treated with the drug alone, and they represent averages of three TG and TNF or four EB1089 independent duplicate determinations S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here