இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் நான் நிரபராதி என 10 மணி நேர அமலாக்கத்துறையின் விசாரணைக்கு பின் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் அரசியல் பின்புலம் உள்ளது; அது யார் என்பது தெரியவில்லை. சுகேஷ் வேண்டுமென்றே இந்த வழக்கில் என்னை கூறியுள்ளார் எனவும் கூறினார்.