இந்திய ராணுவ அகாடமியின் பழைய மாணவரான ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் ஆப்கானில் ஆட்சியமைக்கும் புதிய தாலிபான் ஆட்சியின் வெளியுறவு அமைச்சராகிறார் என்ற செய்திகளுக்கு இடையில் சிஎன்என் நியூஸ் 18 சேனலுக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.
இந்திய ராணுவ அகாடமியின் பழைய மாணவரான ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் ஆப்கானில் ஆட்சியமைக்கும் புதிய தாலிபான் ஆட்சியின் வெளியுறவு அமைச்சராகிறார் என்ற செய்திகளுக்கு இடையில் சிஎன்என் நியூஸ் 18 சேனலுக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.
இந்தியாவுடனான தாலிபான் ஆட்சியின் உறவு எப்படியிருக்கும்?
அனைத்து அண்டை நாடுகளுடனும் சுமுக உறவுகளை வைத்துக் கொள்ளவே தாலிபான்கள் விரும்புகின்றனர். உலக நாடுகள் அனைத்துடனும் நாங்கள் நட்புறவு பாராட்டவே விரும்புகிறோம். 20 ஆண்டுகள் அமெரிக்கப் படைகள் இங்கு இருந்தன, இப்போது படைகளை விலக்கிக் கொண்டனர். அமெரிக்காவுடன் நட்புறவுடன் தான் இருந்தோம். அவர்கள் மீண்டும் வந்து ஆப்கான் புனரமைப்பு திட்டத்தில் பங்கு பெற வேண்டும். அமெரிக்காவுடன் பண்பாட்டு, பொருளாதார நட்புறவு பேண விரும்புகிறோம். இந்தியா மட்டுமல்ல, தாஜிகிஸ்தான், ஈரான், பாகிஸ்தான் என்று அனைத்து நாடுகளுடனும் நட்புறவே பேணுவோம்.
தாலிபான்கள் இந்தியாவைப் பகையாகக் கருதும் என்ற அச்சம் நிலவுகிறது. பாகிஸ்தானுடன் சேர்ந்து தாலிபான்கள் இந்தியாவை எதிர்க்கும் என்ற பயம் உள்ளது. இந்தக் கருத்து பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இது சரியா தவறா?
ஊடகங்கள் இந்த விஷயத்தில் எழுதுவதெல்லாம் தவறாகவே உள்ளன. நாங்கள் அப்படி எதுவும் சூசகமாகக் கூட தெரிவிக்கவில்லை. அனைத்து அண்டை நாடுகளுடனும் நட்புறவு பேண விரும்புகிறோம்.
கேள்வி: ஆப்கானிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளின் புகலிடமாக மாறிவிடும். லஷ்கர், ஜெய்ஷ் – இ-முகமது போன்ற குழுக்கள் புகலிடம் பெற்று வளர்ந்து விடுவார்கள் என்ற அச்சம் நிலவுகிறதே?
பதில்: வரலாறு நெடுகவும் பார்த்தால் ஆப்கான் அண்டை நாடுகளுக்கு தொல்லையாக இருந்ததில்லை. அப்படி ஒன்று நடக்கவே நடக்காது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீண்ட கால புவியியல் அரசியல் தகராறுகள் இருப்பது உண்மைதான். இந்த இருநாடுகளின் பிரச்சனையில் ஆப்கானிஸ்தானை இருநாடுகளும் பயன்படுத்த மாட்டார்கள் என்று கருதுகிறோம். இரு நாடுகளுக்கும் நீண்ட எல்லை இருக்கிறது, இருவரும் அதற்குள் சண்டையிட்டுக் கொள்ளட்டும். ஆப்கானிஸ்தானை அவர்கள் சண்டைக்குப் பயன்படுத்த ஒருநாளும் அனுமதிக்கப் போவதில்லை.
இது எங்கள் கடமை. ஆப்கானை நாங்கள் யாரும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்.
கேள்வி: இந்திய ராணுவ அகாடமியில் நீங்கள் பயிற்சி பெற்றீர்கள். அது பற்றிய உங்கள் நினைவுகள் என்ன? இந்தியாவில் உங்கள் காலம் எப்படி அமைந்தது?
பதில்: அது என் இளமைப்பருவம். ஆப்கானை ரஷ்யர்கள் ஆக்கிரமிப்பு செய்வதற்கு முன் இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்றேன். இங்குதான் பட்டம் பெற்றேன்.
அவர்களுடன் இன்னும் தொடர்பு உண்டா?
இல்லை.
சில நாட்களுக்கு முன் நடந்த காபூல் குண்டுவெடிப்பிற்கு யார் காரணம்?
இராக் ஐஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டதாக ஊடகங்களில் பார்த்தேன்.
கேள்வி: ஆனால் ஹக்கானிதான் காரணம், ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றதாக கூறப்படுகிறதே?
ஆப்கானிஸ்தான் மக்கள் விரோதிகள்தான் இப்படிக் கூறுவார்கள். இது உண்மையல்ல, முற்றிலும் தவறு. இஸ்லாமிக் ஸ்டேட் பொறுப்பு ஏற்றுக் கொண்டதால் அவர்கள்தான் செய்திருக்கிறார்கள்.
கேள்வி: ஆப்கானில் இந்துக்களும் சீக்கியர்களும் இன்னமும் இருக்கின்றனர். இந்தியா அவர்களை வெளியேற்றி கொண்டு வர உதவுவீர்களா?
பதில்: அவர்கள் வெளியேற வேண்டிய அவசியமில்லை. ஆப்கானிஸ்தான் அவர்கள் தாய்மண், அவர்கள் இங்கு இருக்கலாம். இங்கு அமைதியாக வாழலாம். அவர்களுக்கு தீங்கு இல்லை. இதோடு கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானிலிருந்து இந்தியாவுக்கு சென்ற ஹிந்துக்களும், சீக்கியர்களும் கூட மீண்டும் ஆப்கான் வந்து வாழலாம்.
எங்களின் புதிய ஆட்சியை அனைத்து நாடுகளும் ஆதரிக்கும் யாரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை.
இந்தியா மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகள்:
ஆப்கானிஸ்தானில் இந்தியா மேற்கொண்ட வளர்ச்சிப்பணிகள் ஆப்கானின் தேசிய சொத்துக்கள். இது தொடரும் முற்று பெறாத பணிகளை இந்தியா முடிக்கும். முடிக்காத திட்டங்களை முடிக்க இந்தியா இங்கு வரலாம் முடித்து கொடுக்கலாம்.
இதற்காக யார் அங்கிருந்து வந்தாலும் அவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும். இத்தகைய கேள்விகளுக்கு இடமேயில்லை.
இவ்வாறு கூறினார் ஸ்டானிக்சாய்.