கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் பழுதடைந்துள்ள 102 தொடக்கப்பள்ளிகள் கட்டிடங்கள் மற்றும் 69 நடுநிலைப்பள்ளிகள் கட்டிடங்கள் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் செயல்பட்டு வரும் 7 உயர்நிலைப்பள்ளிகளில் உள்ள 20 கட்டிடங்களும், 26 மேல்நிலைப்பள்ளி 67 கட்டிடங்கள் என மாவட்டத்தில் மொத்தமாக பழுதடைந்துள்ள 258 அரசு பள்ளி கட்டிடங்கள் அகற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார். அதில் மிகவும் பழுதடைந்த 28 பள்ளி கட்டிடங்களை உடனடியாக இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.