ஒட்டன்சத்திரம் நகராட்சி, நிலக்கோட்டை, எரியோடு ஆகிய பேரூராட்சிகளில் திமுக வேட்பாளர்கள் ஐந்து பேர் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் திமுக சார்பில் 8-வது வார்டில் திருமலைசாமி, 11-வது வார்டில் வெள்ளைச்சாமி ஆகியோர் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தனர். இவர்களை எதிர்த்து அதிமுக, சுயேச்சைகள் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இவர்கள் தங்கள் வேட்பு மனுக் களை நேற்று வாபஸ் பெற்றனர். இதையடுத்து திருமலைசாமி, வெள்ளச்சாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நிலக்கோட்டை பேரூராட்சி இரண்டாவது வார்டு திமுக வேட்பாளர் சுபாஷினிபிரியா, 13-வது வார்டு திமுக வேட் பாளர் சாமுண்டீஸ்வரி ஆகி யோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். எதிர்த்துப் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்த அதிமுக, பா.ஜ.க., சுயேச்சைகள் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்ற தால் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வானதாக அறி விக்கப்பட்டது.

எரியோடு பேரூராட்சியில் திமுக சார்பில் 4-வது வார்டில் வேட்புமனுத் தாக்கல் செய்த மஞ்சுளா, எதிர்த்து போட்டியிட தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் தள்ளுபடியானதால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இதேபோல் பழநி அருகே கீரனூர் பேரூராட்சி 15-வது வார்டில் திமுக, அதிமுக வேட் பாளர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் சுயேச்சை வேட்பாளர் அமராவதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

சித்தையன்கோட்டை பேரூ ராட்சி 12-வது வார்டில் காங் கிரஸ் கட்சி வேட்பாளர் மக் முதாம்மாள் போட்டியின்றி தேர்ந் தெடுக்கப்பட்டார்.