Site icon Metro People

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்வு: ஆசிரியர் பணியிடங்கள் அதிகரிப்பு

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளதால் அதற்கேற்ப ஆசிரியர் பணியிடங்களை அதிகரிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் பிரிவு) பி.ஏ.நரேஷ், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்தில் ஆகஸ்ட் 1 நிலவரப்படி, அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்புகள் வரை மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நி்ர்ணயம் செய்வது நடைமுறையில் இருந்து வருகிறது.

அந்த வகையில், நடப்பு கல்விஆண்டில் (2021-2022) அரசு, நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்பணியிட நி்ர்ணயம் மேற்கொள்ளப் பட்டது.

அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பணியாளர் நிர்ணய கணக்கீட்டின்படி கூடுதல் ஆசிரியர் தேவையுள்ள பள்ளிகள் கண்டறியப்பட்டு அனுமதி அளித்து ஆணைவழங்கப்படுகிறது. அனுமதி அளிக்கப்பட்ட கூடுதல் பணியிடங்களைநிரப்பத்தக்க காலிப்பணியிடங்களாகக் கருதி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படு கிறது. இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version