கோவிட் பரவத் தொடங்கியது முதல் சமூக இடைவெளி, கைபடாமல் பொருட்களைக் கொடுக்கும் டெலிவரி முறைகள் பழக்கத்தில் வந்துள்ளன. அப்போது உதித்த ஒரு திட்டம்தான் ட்ரோன் முறையில் டெலிவரி செய்யும் திட்டம். முதலில் தெலுங்கானா மாநிலம் மக்களுக்கு தேவையான மருந்துகளை ட்ரோன் மூலம் வினியோகிக்க முயற்சித்தது.

HLL எனும் அரசு சார்ந்த நிறுவனத்துடன் இணைந்து அடிப்படை மருந்துகளையும், தடுப்பூசிகளையும் வினியோகிக்கத் தொடங்கின. இதை அடுத்து இந்தியாவின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான ICMR தங்களது மருந்துகளையும் தடுப்பூசிகளையும் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்ற டிரோன்களை பயன்படுத்தியது. மேலும் தரையில் இருந்து 100 மீட்டர் உயரத்தில் 35 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் ட்ரோன்களை வாங்க உள்ளது.