2022-23 நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் கார்ப்பரேட்டுக்கானது என்றும், மக்களை ஏமாற்றும் வகையில் உள்ளதாகவும் கூறி எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், மத்திய பட்ஜெ டில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கப்பட வில்லை என்று கூறி, புதுச்சேரியில் நேற்று காமராஜர் சாலை – அண்ணா சாலை சந்திப்பில் இந்தியஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பொதுமக்களுக்கு அல்வா கொடுக்கும் நூதனப் போராட்டத் தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு பிரதேச தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். பொருளாளர் சஞ்சய் முன்னிலை வகித்தார். பிரதேச செயலர் ஆனந்த் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.

இளையோருக்கான வேலைவாய்ப்பை உருவாக்கத் தவறி யதையும், புதுச்சேரியில் மின்துறையை தனியார் மய மாக்க முயற்சிப்பதையும் கண்டித்த போராட்டத்தினர் பொது மக்களுக்கு அல்வா வழங்கி தங்கள் எதிர்ப்பை பதிவு செய் தனர்.