Site icon Metro People

பென்னிகுக் சிலையை திறந்து வைக்க லண்டன் வருமாறு முதல்வருக்கு அழைப்பு

முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிகுக் சிலையை லண்டனில் திறந்துவைக்க வருமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பென்னிகுக் ஆராய்ச்சியாளர் சந்தான பீர் ஒளி அழைப்பு விடுத்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜன.16-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், ‘முல்லை பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுக் செய்த தியாகத்தைபோற்றும் வகையில், இங்கிலாந்து நாட்டில்அவரது சொந்த ஊரில் அவருக்கு சிலைஅமைக்கப்படும்’ என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை பென்னிகுக் ஆராய்ச்சியாளர் சந்தான பீர் ஒளி நேற்று சந்தித்து பேசினார்.அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஜூலையில் பணிகள் நிறைவுறும்

கர்னல் ஜான் பென்னிகுக்கின் புதியசிலை அவரின் பிறந்த ஊரான இங்கிலாந்துதலைநகரில் உள்ள மைய பூங்காவில் தமிழக அரசு சார்பில் நிறுவப்படும் என்று அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சிலை நிறுவும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இப்பணிகள் தொடர்பாக முதல்வரை சந்தித்து விளக்கம் அளித் தேன்.

சிலை அமைக்கும் பணி வரும் ஜூலைமாதம் நிறைவடையும் என எதிர்பார்க் கிறோம். லண்டனுக்கு நேரில் வந்து பென்னிகுக் சிலையை திறந்து வைக்க வேண்டும் என்று முதல்வருக்கு அழைப்பு விடுத்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version