சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று நடைபெற்ற விவாதத்தில் அதிமுக உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் பேசியதாவது:

முன்னாள் முதல்வர் பழனிசாமி நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி, அது நடைமுறைக்கு வராததால்தான், 7.5 சதவீத இடஒதுக்கீடு அளித்தார். அதன்மூலம் 435 மாணவர்கள் படித்து வருகின்றனர். எனவே, நீட் தேர்வை ரத்து செய்ய போராட்டம் நடத்தவும், பிரதமரை சந்தித்து அங்குபோராட்டம் நடத்தவும் தயாராகஉள்ளோம். ஆனால், நடைமுறைக்கு சாத்தியமாகுமா? மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது என்பதால், கல்வித் திட்டத்தை வகுத்து பயிற்சி அளித்து நீட் தேர்வை எதிர்கொள்ளும் சக்தியை உருவாக்க வேண்டும்.

தேர்தல் அறிக்கையில் நீட்தேர்வு தொடர்பான சூட்சுமம் எங்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளீர்கள். எந்த சூட்சுமத்தை நீங்கள் கையாண்டாலும் அதற்கு அதிமுக ஆதரவாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.