திருமணத்துக்குப் பிறகு கணவரின் குடும்பப் பெயரான அக்கினேனியை தனது பெயருடன் இணைத்துக் கொண்டவர், சமீபத்தில் தனது ட்விட்டர் கணக்கில் ஆங்கில ‘எஸ்’ என்று பெயரை மாற்றினார்.

கணவர் நாக சைதன்யாவை சமந்தா பிரிய இருப்பதாக ஒரு வதந்தி இரு தெலுங்கு மாநிலங்களிலும் உலவுகிறது.

நடிகை சமந்தா நாகார்ஜுனின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் சமந்தா திரைப்படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும், தெலுங்கில் சாகுந்தலம் படத்திலும் நடிக்கிறார். இதன் பிறகு சற்று பிரேக் எடுத்துக் கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.

திருமணத்துக்குப் பிறகு கணவரின் குடும்பப் பெயரான அக்கினேனியை தனது பெயருடன் இணைத்துக் கொண்டவர், சமீபத்தில் தனது ட்விட்டர் கணக்கில் ஆங்கில ‘எஸ்’ என்று பெயரை மாற்றினார். சாகுந்தலம் படத்தின் புரமோஷனுக்காக அவர் அப்படி மாற்றிக் கொண்டதாக கருதினர். ஆனால், நாக சைதன்யாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிய இருப்பதாலேயே கணவரின் குடும்பப் பெயரை சமந்தா தவிர்த்துள்ளார் என்கிறார்கள் சிலர்.

இந்த வதந்திக்கு உரம் சேர்ப்பது போல் பேசியிருக்கும் சமந்தா, “எந்த விஷயமானாலும் எனக்கு விரும்பும் போதுதான் பேசுவேன். மக்கள் கேட்பதற்காக பேச முடியாது. இதுபோன்ற விஷயங்களுக்கு எதிர்வினையாற்ற விரும்பவில்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் சொந்தக் கருத்தில் எந்தளவு உரிமை உள்ளதோ அதே உரிமை எனக்கும் உள்ளது” என கூறியுள்ளார்.

இந்நிலையில், ஆகஸ்ட் 29 நாகார்ஜுன் பிறந்தநாளுக்கு சமந்தா வாழ்த்து சொல்கிறாரா என்று பலரும் கண்ணில் எண்ணைய் ஊற்றி காத்திருந்தனர். அவர்களை ஏமாற்றும் விதமாக ட்விட்டரில் வாழ்த்து கூறியிருந்தார் சமந்தா.

“உங்கள் மீது நான் வைத்திருக்கும் மரியாதையைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. இன்றும் என்றும் அதிகபடியான மகிழ்ச்சியும், ஆரோக்கியத்துடனும் இருக்க வாழ்த்துகிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள் மாமா” என்று அந்த ட்வீட்டில் கூறியுள்ளார்.

மாமா என்று முறை சொல்லி அழைத்தாலும், சமந்தாவின் வாழ்த்துச் செய்தியில் ஒரு விலகல் தெரிகிறது என வதந்திக்கு உயிர் கொடுக்க முயல்கிறார்கள். சமந்தா விளக்கமளித்தால் மட்டுமே இந்த வதந்தி அடங்கும்.