பாஜக மாநில செயலாளராக இருந்த கே.டி. ராகவன், பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொள்ளும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆன நிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக கே.டி.ராகவன் அறிவித்துள்ளார்.

பாஜக கட்சியில் மிக முக்கிய பொறுப்பில் இருக்கும் தலைவர்கள், நிர்வாகிகள் மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் எழுந்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாஜக-வில் முக்கிய பொறுப்பில் இருக்கும் கே.டி ராகவன் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது அக்கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த அவர், பெண்களிடம் பொதுவாக பேசும் போதே வரிங்களா என கேட்பதை வழக்கமாக கொண்டுள்ளார் என கூறப்படுகிறது.

அதிலும் சமீபத்தில் வீடியோ கால் மூலம் பாஜகவை சேர்ந்த ஒரு பெண் நிர்வாகியிடம் பேசும் போது ஆபாசமாக சைகைகாட்டி பேசியுள்ளார். தொடர்ந்து சுய இன்பத்தில் ஈடுபட்டதையும் வீடியோவில் காட்டியதால் பதறிப்போன அந்த பெண் செல்போனை தூக்கி எரிந்ததாகவும் கூறப்படுகிறது. கே.டி ராகவன் இப்படி கீழ்தரமாக பேசுவதும் நடந்துகொள்ளும் வீடியோ சமூகவலைதளங்களில் காட்டு தீயால் பரவி வருகிறது.

இந்த நிலையில் பாஜக கட்சியில் இருந்து விலகுவதாக கேடி.ராகவன் அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும், என்னை சார்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும்.நான்30 வருடமாக எந்த ஓரு பிரதி பலனும் இன்றி பணியாற்றி வருகிறேன். இன்று காலை சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளி வந்ததை அறிந்தேன்.நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன் சட்டபடி சந்திப்பேன் என பதிவிட்டுள்ளார்.