சென்னையில் முதல் அரையாண்டுக்கான சொத்துவரி மற்றும் குடிநீர் வரியை செலுத்த இன்று கடைசி நாள் ஆகும்.

தமிழகம் முழுவதும் சொத்து வரியை உயர்த்தி சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் புதிய சொத்து வரி உயர்வை அமல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றன.

சென்னையில் புதிய சொத்து வரி வசூலிக்கும் பணியை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. இதன்படி புதிய சொத்து வரி தொடர்பான நோட்டீஸ் தபால் மூலம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் உள்ள விவரங்களின் படி பொதுமக்கள் சொத்துவரியை செலுத்தி வருகின்றனர்.

இதன்படி சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டுக்கான சொத்துவரியை செலுத்த இன்று கடைசி நாள் ஆகும். கடந்த ஒரு வாரமாக சென்னையில் தினசரி 15 ஆயிரம் பேர் சொத்துவரி செலுத்தி வருகின்றனர். இதன்படி நேற்று வரை ரூ.650 கோடி சொத்துவரி வசூல் ஆகிய உள்ளது. இன்று இரவு 12 மணி வரை பொதுமக்கள் சொத்துவரியை செலுத்தலாம். இதன்படி பார்த்தால் இந்த நிதியாண்டில் முதல் அரையாண்டில் ரூ.700 கோடி சொத்துவரி வசூல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைப்போன்று சென்னையில் குடிநீர் வாரியத்திற்கான குடிநீர் வரியை செலுத்தவும் இன்றுதான் கடைசி நாள் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.