அரசுப்பள்ளி மாணவியருக்கு உரிமைத்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என உயர்க்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து உயர்க்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் கல்வி வளர்ச்சி நாளான காமராஜரின் பிறந்தநாளில் இருந்து நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 3 லட்சம் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கி திட்டம் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கலை, அறிவியல், பொறியியல், வேளாண்மை, கால்நடை உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளில் பயிலும் மாணவியரின் வங்கிக்கணக்கு இந்த தொகை நேரடியாக வரவு வைக்கப்படும்.