சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் ‘போஸ்ட் மேன்’ பணியை மட்டும் தான் செய்யச் சொல்கிறோம்  என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற, ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் நீட் எதிர்ப்பு, தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு தொடர் பரப்புரைப் பயண நிறைவு சிறப்புப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.