எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராமகிருஷ்ணன், தென்மண்டல தலைவர் வாசுதேவ தேசிகாச்சாரி ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், எல்ஐசிஎம்எஃப் என்ற புதிய மல்டிகேப் நிதி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. அக். 20-ம் தேதி வரைதிறந்திருக்கும். நவ. 2-ம் தேதி இந்த திட்டம் மீண்டும் திறக்கப்படும்.

இந்தக் காலகட்டத்தில் சந்தாதாரர்கள் தாங்கள் விரும்பிய பங்குகளை வாங்கலாம். இதன் மூலமாக, ரூ.1,500 கோடி நிதி திரட்ட எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் திட்டமிட்டுள்ளது. பிரீமியம், வட்டி விகிதங்கள் மற்றும் வருவாய் வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் பார்வைகளுக்கு ஏற்ப நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.