முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105-ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை – கிண்டியில் உள்ள அவரது உருவப்படத்துக்கு தமிழக அரசு சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105-ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பேராசியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.