கடலூர் நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் திருப்பாதிரிப்புலியூரில் நேற்று நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராஜாவரவேற்று பேசினார்.கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஐயப்பன்எம்எல்ஏ, மாநில தேர்தல் பணிக் குழு செயலாளர் இளபுகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தொமுச பழனிவேல், நகரபொருளாளர் சலீம், விஆர். அறக் கட்டளை நிறுவனர் விஜயசுந்தரம், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதி.பெருமாள், ரவிச்சந்திரன், இளை ஞரணி ஜெயசீலன், பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில், உதயநிதி ஸ்டாலி னுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும். பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாளை ஆண்டு முழுவதும் கிளைக்கழகம் தோறும் கொண்டாட வேண்டும். புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். பூத் கமிட்டி அமைத்து, வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும். கடலூர் மாநகராட்சியை திமுக கைப்பற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.