தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக போடப்பட்ட ஊரடங்கில் படிப்படியாகதளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, வண்டலூர் பூங்கா, மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் சில நிபந்தனைகளுடன் (ஞாயிறு தவிர) மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளன. இதனால், மெரினா கடற்கரை, வண்டலூர் உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு மக்கள் செல்வது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தேவையின் அடிப்படையில் மாநகர போக்குவரத்துகழகம் கூடுதல் பேருந்துகளை இயக்கி வருகிறது.

இது தொடர்பாக மாநகரபோக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளதால், தேவையின் அடிப்படையில் பேருந்துகளை அதிகரித்து இயக்கி வருகிறோம்.

மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஏற்கெனவே 2,600-க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்கி வருகிறோம். தற்போது, கூட்டம்அதிகமாக வரும் மெரினா கடற்கரை, கோவளம்,வண்டலூர் பூங்கா உள்ளிட்ட சில வழித்தடங்களில் 50-க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்கி வருகிறோம். கூட்டம் அதிகரித்தால், கூடுதல் பேருந்துகளை இயக்க நாங்கள் தயாராக உள்ளோம்’’ என்றார்.