தாய்மொழி, பாரம்பரிய உடை, கலாச்சாரம் ஆகியவை ஒவ்வொரு மனிதருக்கும் முக்கியமானது என வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

தாய்மொழிதான் எப்போதும் முக்கியம்  அதன் பின்புதான் பிறமொழிகள் எனவும் மொழியை திணிக்கவும் கூடாது, அதை எதிர்க்கவும் கூடாது என முன்னாள் குடியரசு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கோவை நீலம்பூர் பகுதியில்  தனியார் கல்லூரி(PSG) வளாகத்தில் உள்ள அரங்கில்  ரோட்டரி மாவட்ட மாநாட்டில்  முன்னாள் துணை குடியரசு தலைவர்  வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். ரோட்டரியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு வெங்கையா நாயுடு பதக்கங்களை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய  வெங்கையா நாயுடு,சேவை துறையான ரோட்டரி மக்களுக்கு சேவை சிறப்பாக செய்து வருகின்றது என தெரிவித்தார்.

மேலும் பேசியவர், “தாய்மொழிதான் முக்கியம், அதன் பின்னர்தான் மற்றவை ,பிறமொழிகளுக்கு எதிரானவன் அல்ல, அதே வேளையில் ஓவ்வொருவருக்கும் தாய்மொழிதான் முதன்மையானது. ராஜ்யசபாவில் அவரவர் தாய் மொழியில்தான்  பேச சொல்வேன்.  தமிழில் வணக்கம் என்பது பொதுவானது, ஆங்கிலத்தில் நேரத்திற்கு ஒரு வார்த்தை இருக்கின்றது. தாய்மொழி, பாரம்பரிய உடை, கலாச்சாரம் ஆகியவை ஒவ்வொரு மனிதருக்கும் முக்கியமானது.

தாய்மொழி குறித்து பேசுவதால் பிறமொழிகளை படிக்க கூடாதா என்று கேட்கலாம்,எந்த மொழியினையும் திணிக்க கூடாது, எந்த மொழியினையும் எதிர்க்கவும் கூடாது. ஆந்திராவில் இந்தி மொழியை திணிக்க வேண்டாம் என்றேன்,ஆனால் டெல்லியில் ஹிந்தி தேவை என உணர்ந்தேன், ஹிந்தியை படிக்க ஆரம்பித்தேன். ஆனால் முதலில் நாம் படிக்க வேண்டுவதும், பேச வேண்டுவதும் தாய் மொழி தான் . தேவைப்படும் மொழியை நாம் கற்றுக் கொள்வது நல்லது,பல மொழிகள் தெரிந்து கொள்வதால் அந்த கலாச்சாரங்களை தெரிந்து கொள்ள முடிகின்றது” என்றார்.