இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகியுள்ளது மோட்டோரோலாவின் மோட்டோ ஜி22. இந்த போன்.பட்ஜெட்டுக்கு கட்டுப்படியாகும் விலையில் விற்பனைக்கு வரவுள்ளது.
மோட்டோ ஜி22 போன் ஜியோமி, ரியல்மி, இன்பினிக்ஸ் நிறுவனங்களின் பட்ஜெட் ரக போன்களுக்கு கடுமையான போட்டியாளராக இருக்கும் எனஹ் தெரிகிறது. வரும் 13-ஆம் தேதி ஆன்லைன் மூலம் இதன் விற்பனை ஆரம்பமாகிறது. இந்த போனுக்கு ஆயிரம் ரூபாய் அறிமுகச் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை முதல் இரண்டு நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சம் மற்றும் விலை: 6.5 இன்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி37 புராசஸர், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், பின்பக்கத்தில் நான்கு கேமரா. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா. 16 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா. 5000mAh பேட்டரி, 20 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட், 4ஜி இணைப்பு, டைப் ‘சி’ சார்ஜிங் போர்ட், 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி முதலியவை இடம் பெற்றுள்ளது.
சந்தையில் ரூ.10,999-க்கு விற்பனையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் இந்த போனுக்கு அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் தளம் மூலமாக இந்த போன் விற்பனை ஆரம்பமாக உள்ளது.
என்ன சொல்கிறார்கள் பயனர்கள்? போனின் டிசைன், மெல்லிய எடை, டிஸ்ப்ளே வெளிச்சம், அவுட்டோரில் எடுக்கும் படங்கள் துல்லியமாக உள்ளதாக இந்த போனை பயன்படுத்திய பயனர் தெரிவித்துள்ளார். மேலும் ரூ.12000-க்கு கீழ் போனை வாங்க விரும்புவோரின் எதிர்பார்ப்பை இந்த போன் திருப்திப்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அடுத்த சில நாட்களில் இந்த போனை வாங்கி பயன்படுத்தும் பயனர்கள் கொடுக்கும் ரிவ்யூ எப்படி இருக்கிறது என்பதை கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.