சாண்டி மற்றும் அவரது மனைவி சில்வியா இருவருக்கும் இரண்டாவதாக ஆண் குழந்தையும் பிறந்தது.  

”என்னுடைய ராஜாவின் அறிமுகம்” என்ற கேப்ஷனுடன் தனது மகனின் புகைப்படத்தை முதன்முறையாக இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் புகழ் சாண்டி மாஸ்டர்.

சின்னத்திரையில் தனது நடன திறமையால் தனக்கென தனி இடம், சிறந்த அங்கீகாரத்தைப் பெற்றவர் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. டான்ஸ் மாஸ்டர் கலாவின் சிஷ்ய பிள்ளையான சாண்டி மானாடா மயிலாட வாங்கி கொடுத்த புகழ் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார். விஜய் டிவியில் நடந்த அனைத்து ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் இவரின் முகம் ஜொலிக்க தொடங்கியது. ஸ்பெஷல் டான்ஸ் என்றாலே அது சாண்டி தான் என்ற அளவுக்கு இவரின் திறமை மூலம் வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் கால் பதித்து வெற்றி கண்டார் சாண்டி.

ரஜினியின் காலா படத்தில் பணியாற்றிய சாண்டிக்கு பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அங்கும் பாடல்கள், நடனம், கலாய், மாஸ், லோக்கல் என ஜாலியான ரகளைகளின் மூலம் பிரபலமானார். கூடவே அவரின் மகள் லாலாவும் எல்லோருக்கும் பரிச்சயமானார். இந்நிலையில் சமீபத்தில் சாண்டி மற்றும் அவரது மனைவி சில்வியா இருவருக்கும் இரண்டாவதாக ஆண் குழந்தையும் பிறந்தது.

குழந்தை பிறந்த தகவலை இன்ஸ்டாவில் பதிவு செய்திருந்த சாண்டி, இத்தனை மாதங்களாக குழந்தையின் முகத்தை சமூகவலைத்தளத்திற்கு அறிமுகம் செய்யாமல் இருந்தார். இந்நிலையில், தற்போது சாண்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் ”என்னுடைய ராஜாவின் அறிமுகம்” என்ற கேப்ஷனுடன் சமீபத்தில் மகனை வைத்து நடத்திய ஃபோட்டோ ஷூட்டின் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். சாண்டியின் மகனை பார்த்த ரசிகர்கள் குழந்தை மற்றும் சாண்டி குடும்பத்திற்கு வாழ்த்துக்களை கூறியுள்ளனர். அதே போல் சாண்டியின் நண்பர்கள், சின்னத்திரை பிரபலங்கள், பிக் பாஸ் பிரபலங்கள் பலரும் சாண்டிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை பரிமாறியுள்ளனர். இந்த பதிவில் குழந்தையின் பெயர் S.D ஷவன் மைக்கல் என்பதையும் , அனைவரின் ஆசீர்வாதமும் எங்களுக்கும் என் குழந்தைக்கும் வேண்டும் என்று சாண்டி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here