சிறந்த நடிகைக்கான விருது பெற்றதற்காக சமந்தாவுக்கு கேக் வெட்டி படக்குழுவினர் சந்தோஷத்தை கொண்டாடியுள்ளனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. திருமணத்திற்குப் பிறகும் மார்க்கெட் குறையாமல் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் திருமணத்திற்கு பின்னர் அதிக அளவில் கவர்ச்சியை காட்டி நடித்து வருவதால், தனக்கென நிலையான இடத்தையும், தனி ரசிகர் கூட்டத்தையும் வைத்துள்ளார்.

தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் கதை என்ற படத்தில் சமந்தா நடித்து வருகிறார். படத்தில் சமந்தாவுடன் விஜய் சேதுபதி மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகியோர் நடித்து வருகின்றனர். தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காத்துவாக்குல ரெண்டு காதல் கதை படப்பிடிப்பு தளத்தில் சமந்தாவுக்கு கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். அதுக்கு காரணம் என்னனு பாத்திங்கான

சமீபத்தில் நடிகை சமந்தா நடிப்பில் வெளியான பேமிலிமேன் வெப்தொடர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சர்ச்சைகளை தாண்டி இத்தொடரில் நடிகை சமந்தாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. மேலும் மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழாவின் வெப்சீரிஸ் பிரிவில் சிறந்த நடிகையாக சமந்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த நடிகைக்கான விருது பெற்றதற்காக சமந்தாவுக்கு கேக் வெட்டி படக்குழுவினர் சந்தோஷத்தை கொண்டாடியுள்ளனர். விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் உடன் இருக்கும் போது சமந்தா கேக் வெட்டிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.