பெண் கிராம ஊராட்சி செயளர்களுக்கான மகப்பேறு விடுப்பை ஓராண்டாக உயர்த்தி வழங்கப்படும்.

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்தபடும் என்று ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரிய கருப்பன் பதிலுரை வழங்கிய பின்பு 28 புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

5,780 கி.மீ நீளத்திற்கு ஊரக சாலைகளை மேம்படுத்துதல் வலுப்படுத்துதல் மற்றும் 121 பாலங்களை கட்டுதல் 2097 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

நிலத்தடி நீரை அதிகரிக்கவும் நீர்ப்பாசன தேவைகளை நிறைவேற்றவும் 1149 ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பனைகள் உறிஞ்சு குழிகள் கிணறுகள் மற்றும் இதர பசுமையாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஏற்கனவே கட்டப்பட்டுள்ள பழைய சமத்துவபுரங்களில் உள்ள வீடுகள் குடிநீர் கட்டமைப்பு தெரு விளக்குகள் போன்றவற்றை சீரமைக்கும் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும்.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட 12,525 நூலகங்கள் மேம்படுத்தப்படும்.

சிறப்பான சேவைகளை வழங்குவதற்காக 550 கிராம ஊராட்சி அலுவலக கட்டிடங்கள், 15 ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்கள், மற்றும் 500 அங்கன்வாடி மைய கட்டடங்கள் 233.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

திட்டக் கண்காணிப்பினை வலுப்படுத்துவதற்காக மாவாட்ட மற்றும் வட்டார அளவிலான அலுவலர்களுக்கு புதிய வாகனங்கள் வழங்கப்படும்.

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்தபடும்

சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு முன்மாதிரி கிராம விருது வழங்கப்படும்.

பாதுகாக்கப்பட்ட குடிநீர் உறுதி செய்யும் பொருட்டு நீரின் தரத்தை பரிசோதிப்பதற்காக சுய உதவி குழு பெண்களுக்கு பயிற்சி அளித்தல்.

ஊரக நிர்வாகத்தில் உள்ள கணக்குகள் பதிவேடுகள் மற்றும் படிவங்கள் எளிமைப் படுத்தபட்டு முறைப்படுத்தப்படும்.

ஊரக பகுதிகளில் சுய உதவி குழுக்கள் மற்றும் தனிநபர்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகள் 84.68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உரிவாக்கப்படும்.

பெண் கிராம ஊராட்சி செயளர்களுக்கான மகப்பேறு விடுப்பை ஓராண்டாக உயர்த்தி வழங்குதல்.

சுய உதவிக்குழுக்கள் மற்றும் சமுதாய அமைப்புகளை வலுப்படுத்த 188 கோடி ரூபாய் சூழல்நிதி மற்றும் சமுதாய நிதி வழங்கப்படும்

5000 மகளிர் விவசாயிகளை உள்ளடக்கிய 50 இயற்கை பண்ணை தொகுப்புகள் உருவாக்கப்படும்.

கிராமப்புறத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வேளாண், தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு போன்ற இணை தொழில்கள் 37 கோடி ரூபாய் மானியத்தில் 185 பண்ணை தொகுப்புகளாக உருவாக்கப்படும்.

மகளிர் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்தினை உறுதி செய்ய இரண்டு லட்சம் ஊட்டச்சத்து தோட்டங்கள் அமைக்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பது உள்ளட்ட 28 அறிவிப்புகளை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரிய கருப்பன் வெளியிட்டார்.

மேலும், ஊரக வீட்டுவசதி திட்டத்தின்கீழ், 2016 முதல் 2021 வரை 8,17,439 வீடுகள் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டதில், இதுவரை 3,03,013 வீடுகள்மட்டுமே கட்டப்பட்டுள்ளன. இதனால் 2020-21 ஆண்டுக்கான நிதியைமத்திய அரசிடம் இருந்து பெறமுடியவில்லை.

மகளிருக்கானஇருசக்கர வாகன திட்டத்தைப் பொறுத்தவரை, கடந்த ஆட்சியில்பணிக்கு செல்லும் பெண்களுக்குஅடிப்படையாக சென்று சேரவில்லை. இன்று அனைத்து பெண்களும் இலவச பேருந்து பயணத்திட்டத்தில் பயன் பெற்று வருகின்றனர்.

இதனால், இருசக்கர வாகனதிட்டத்தில் யாரும் விண்ணப்பிக்கவில்லை. பெண்கள் மத்தியில் அந்ததிட்டத்துக்கு வரவேற்பு இல்லை என்றும் கூறினார்.