சென்னை: கல்வித் துறையின் கட்டடங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, கட்டடங்களின் உறுதித்தன்மையைப் பொறுத்து இடித்துவிட்டு கட்ட வேண்டும் என்று பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் ஏ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளார்.

கோயம்புத்தூர் மண்டலத்தில் பொதுப் பணித்துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளின் தொடர்பாக, பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இதில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, வருவாய்த் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, திருப்பூர் மாவட்டத்தில் கல்லூரிகளின் விடுதி கட்டடங்கள் வணிக வரி மற்றும் பதிவுத் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை, சட்டத் துறை, போக்குவரத்துத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை, பள்ளிக் கல்வித் துறை ஆகியவற்றின் அறிவிப்புகள் தொடர்பாக ஆய்வு செய்தார்.

மேலும், பொதுப் பணித் துறையால், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் மருத்துவத் துறை பணிகளளை ஆய்வு செய்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் கூடுதல் கட்டடங்கள் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் விரைவாக செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், பல அறிவுறுத்தல்களை வழங்கினார்.