அண்மைக்காலமாக ஆன்லைன் மோசடிகள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. எனவே, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்-க்கான பீட்டாவின் எதிர்கால புதுப்பிப்புக்காக வாட்ஸ்அப் கணக்கில் உள்நுழைவதற்கு முன்பு கூடுதல் பாதுகாப்பைச் சேர்க்கும் வகையில், புதிய பாதுகாப்பு அம்சத்தில் மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் செயல்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் பீட்டா தகவலின் படி, இந்த பாதுகாப்பு அம்சம் உருவாக்கத்தில் உள்ளதாகவும், தற்போது பொதுமக்களுக்கு இந்த அம்சத்தை வெளியிடத் தயாராக இல்லை என்றும் அறிக்கையில் கூறியுள்ளது.

பீட்டா சோதனையாளர்களுக்கு இந்த அம்சம் வெளியிடப்படும்போது, ​​மற்றொரு சாதனத்திலிருந்து பயனரின் வாட்ஸ்அப் கணக்கில் உள்நுழையும் போது, அதனை உறுதிப்படுத்த கூடுதல் சரிபார்ப்புக் குறியீடு தேவைப்படும். 6 இலக்கக் குறியீட்டை அப்பாவியாகப் பகிரக்கூடிய பயனர்களைப் பாதுகாப்பதற்காக இந்த பாதுகாப்பு அம்சத்தில் செயல்பட்டு வருவதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வாட்ஸ்அப் பீட்டா சோதனையாளர்களின் எதிர்கால அப்டேட்டிற்காக குறுஞ்செய்திகளைத் திருத்தும் திறனை வாட்ஸ்அப் தற்போது செய்து வருவதாக சமீபத்தில் ஒரு அறிக்கை கூறியது. மேலும், இந்த அம்சம் உருவாக்கத்தில் உள்ளது. இந்நிலையில், இதற்கு அடுத்தபடியாக டபுள் வெரிஃபிகேஷன் பாதுகாப்பு அம்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here