கரோனா புதிய திரிபான எக்ஸ் தொற்று மும்பையில் கண்டறியப்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியான நிலையில் இதனை மத்திய சுகாதார அமைச்சகம் மறுத்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கரோனா பரவல் குறைந்து வருகிறது. இதனை அடுத்து கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்ள்ளன. வெளிநாட்டு விமான சேவையும் மீண்டும் தொடங்கின.

இதனிடையே பிரிட்டனில் முதன்முதலாக இந்த புதிய மாறுபட்ட கரோனா திரிபு கண்டறியப்பட்டது தற்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள எக்ஸ்இ எனும் புதிய மாறுபாடு, ஒமைக்ரானின் பிஏ.1 மற்றும் பிஏ.2 ஆகிய இரண்டு மாறுபாடுகளின் பிறழ்ந்த கலப்பாகும்.

கரோனா புதிய திரிபான எக்ஸ்இ முந்தைய திரிபுகளை ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகமாக பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்து இருந்தது.

இந்தநிலையில் இந்தியாவின் முதல் கரோனா புதிய திரிபான
எக்ஸ்இ தொற்று மும்பையில் பதிவாகியுள்ளதாக நேற்று தகவல் வெளியானது. மும்பை மாநகராட்சி தகவலின்படி புதிய வைரஸ் திரிபு தொற்று கொண்ட நோயாளிகளுக்கு இதுவரை கடுமையான அறிகுறிகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் கரோனா புதிய திரிபான எக்ஸ்இ தொற்று மும்பையில் கண்டறியப்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியான நிலையில் இதனை மத்திய சுகாதார அமைச்சகம் மறுத்துள்ளது. தற்போதைய சான்றுகள்படி இது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளது.

மும்பையில் கோவிட் எக்ஸ்இ மாறுபாட்டின் பாதிப்பு குறித்து சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்த விவரங்கள் மரபணு நிபுணர்களால் விரிவாக பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.