டோக்கியோவில் நடந்து வரும் ஒலி்ம்பிக் விளையாட்டுப் போட்டியில் பாட்மிண்டன் பிரிவில் இ்ந்திய வீராங்கனை பி.வி.சிந்துவின் வெற்றி நடை தொடர்ந்து, காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.

இன்று நடந்த 2-வது சுற்றில் ஹாங்கா வீராங்கனை என்.ஒய்.சாங்கை வீழ்த்தி சி்ந்து காலிறுதிக்குமுந்தையச் சுற்றுக்கு முன்னேறினார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பாட்மிண்டனில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் இன்று நடந்தன. இதில் ஜே பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவை எதிர்த்துதரவரிசையில 34வது இடத்தில் உள்ள ஹாங்காங் வீராங்கனை என்.ஒய்.சாங் மோதினார்.

35 நிமிடங்கள் மட்டும் நீடித்த இந்த ஆட்டத்தில் ஹாங்காங் வீராங்கனை சாங்கை 21-9, 21-16 என்ற புள்ளிகளில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றை சிந்து உறுதி செய்தார்.

அடுத்த சுற்றில் டென்மார்க் வீராங்கனையும், தரவரிசையில் 12-வதுஇடத்தில் உள்ள மியா பிளிச்பீல்டை எதிர்கொள்கிறார் சிந்து. இதுவரை பிளிச்பீல்டை எதிர்த்து சிந்து 5 முறை மோதியுள்ளார்.

இதில் 4முறை சிந்துவும், ஒருமுறை பிளிச்பீல்டும் வென்றுள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் தாய்லாந்தில் நடந்த யோனெக்ஸ் கோப்பையில்தான் சிந்துவை முதல்முறையாக பிளிச்பீல்ட் சாய்த்தார்.

ஆதலால், பிளிச்பீல்டுடனான ஆட்டமும் சிந்துவுக்கு பெரிய சவாலானதாக இருக்காது என நம்பலாம்.
சிந்து முதல் செட்டில் 6-2 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த நிலையில் சர்வீஸ்களிலும், பந்தை திருப்பி அனுப்புதல், பிளேஸ் செய்தலில் சில தவறுகளைச்செய்ததால், 10-3 என்ற புள்ளிக்கணக்கில் பின்னடைந்தார். ஆனால், அதன்பின் தனது வழக்கமான ஆட்டத்துக்கு திரும்பிய சிந்து, வலிமையான ஆட்டத்தால் 20-9 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார்.

2-வது செட்டில் சிந்துவுக்கு நெருக்கடி கொடுத்து ஆடிய சாங் 6-6, 8-8 என்ற கணக்கில் தொடர்ந்து வந்தார்.ஒரு கட்டத்தில் 19-14 என்ற கணக்கில் ஆட்டம் பரபரப்பாக இருந்தது. ஆனால், சிந்துவின் அனுபவம் மற்றும் நுனுக்கம் ஆகியவற்றால் அதிரடியாக இரு புள்ளிகளைப் பெற்று அந்த செட்டைக் கைப்பற்றினார்.
இன்று பிற்பகலில் நடக்கும் டி பிரிவு ஆட்டத்தில் நெதர்லாந்து வீரர் கால்ஜோவை எதிர்கொள்கிறார் இந்திய வீரர் பி சாய் பிரணித்.