ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், மகர சங்கராந்தி நாளில் கங்கையில் புனித நீராட ஹரித்வார் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் மகர சங்கராந்தி பண்டிகை நாளில் பக்தர்கள் கங்கையில் புனித நீராடுவது வழக்கம். இதையொட்டி இந்த ஆண்டும் வரும் 14-ம் தேதி ஹர் கி பாரி பகுதியில் புனித நீராடும் நிகழ்ச்சிக்கு திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஹரித்வார் மாவட்ட ஆட்சியர் வினய் ஷங்கர் பாண்டே பிறப்பித்துள்ள உத்தரவில், “மகர சங்கராந்தி அன்று ஹரித்வாரில் பக்தர்கள் கங்கையில் புனித நீராட முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. கரோனா வைரஸ் மூன்றாவது அலை மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஹர் கி பாரி பகுதிக்கு பக்தர்கள் வர அனுமதி இல்லை. ஹரித்வாரில் ஜனவரி 14-ம் இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.