சென்னையில் நவ.30-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று ஒரு நாள் மின் தடையைத் தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“சென்னையில் 30.11.2021 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வாரியப் பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மாலை 4 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

பூந்தமல்லி வடக்குப் பகுதி: காடுவெட்டி, வீரராகவபுரம், ஆவடி மெயின் ரோடு, அருணாசலம் நகர், மேட்டுப்பாளையம், ஆயில்சேரி.

பொன்னேரி பகுதி: திருவாய்கண்டிகை, கரடிபுத்தூர், ஜி.ஆர் கண்டிகை, கண்ணக்கோட்டை, சின்னபுலியூர், பெரியபுலியூர்”.

இப்பகுதிகளில் மின் விநியோகம் குறிப்பிட்ட நேரத்திற்கு நிறுத்தப்படும்”.

இவ்வாறு மின்வாரியம் தெரிவித்துள்ளது.