இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் நேற்று இரவு (நவ.10) முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் இன்று (நவ.11) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 29 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திற்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கையும், அடுத்த 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

இதன்படி இன்று (நவ.11) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிக கன முதல் அதித கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த பகுதிகளுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை (நவ.12) மற்றும் நாளை மறுநாள் (நவ.13) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மின கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நவ.14 மற்றும் நவ.15 ஆம் தேதிகளிலும் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மின கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.