பாராலிம்பிக்ஸ் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கங்கள் வென்ற மணிஷ் நார்வால், சிங்ராஜ் அதானா ஆகியோருக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் மணிஷ் நார்வால் தங்கப் பதக்கத்தை வென்றார். சிங்ராஜ் அதானா வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதனைத் தொடர்ந்து மணிஷ் நார்வால் மற்றும் சிங்ராஜ் அதானாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “டோக்கியோ பாராலிம்பிக்ஸ் இந்தியாவுக்கு மூன்றாவது தங்கத்தைப் பெற்றுத் தந்திருக்கும் மணீஷ் நார்வாலுக்கும், தனது இரண்டாவது பதக்கத்தை வென்றிருக்கும் சிங்ராஜ் அதானாவுக்கும் எனது பாராட்டுகள்.

நமது பாராலிம்பிக்ஸ் வீரர்களின் இந்தச் சிறப்பான வெற்றிகள் மேலும் பல திறமையாளர்களுக்குப் புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறந்துவிடும்” என்று தெரிவித்துள்ளார்.