அமைதியும்; உடல்நலனும்; மகிழ்ச்சியும் பெற்றுத் திகழட்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்தநாளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் தமிழக ஆளுராகப் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இன்று ஏப்ரல் 4ல் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பிறந்தநாளுக்கு தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:
”தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். அமைதியும்; உடல்நலனும்; மகிழ்ச்சியும் பெற்றுத் திகழ இந்நாளில் அவரை வாழ்த்துகிறேன்.” இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.