சென்னை கமலாலயத்தில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி இருப்பது கண்டிக்கதக்கது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

“நேற்று நள்ளிரவு பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசி தாக்கியிருப்பது கண்டிக்கதக்கது. இது ஏற்புடையதல்ல.

இது சம்பந்தமாக காவல்துறை ஒருவரை கைது செய்து இருக்கிறது. மேலும் இச்செயலில் ஈடுப்பட்டு இருப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இச்செயல் மேலும் தொடராமல் இருப்பதற்கு பாஜக தலைமை அலுவலகத்திற்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.