சென்னை: பொதுமக்களின் குறைகளைக் கண்டறிந்து, அவற்றின் மீது உடனடி தீர்வு காணும் வகையில், ‘மக்களைத் தேடி மேயர்’திட்டம் கடந்த மே மாதம் தொடங்கப்பட்டது. நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக நாளை (ஜூலை 22) தண்டையார்பேட்டையில் உள்ள மண்டலஅலுவலகத்தில் முகாம் நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் நாளை நடைபெற இருந்த ‘மக்களைத் தேடி மேயர்’ திட்ட சிறப்பு முகாம் நிர்வாக காரணங்களுக்காகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்தசிறப்பு முகாம் நடைபெறும் நாள்மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.