தமிழகத்தில் 43 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளின் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி 2010-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளான மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா உள்ளிட்ட 14 பேருக்கு selection grade ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

1999-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த 4 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முதன்மைச் செயலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த 13 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு junior administrative grade ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 2007-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு super time scale ஐஏஎஸ் அதிகாரிகளாக ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 8 அதிகாரிகளுக்கு தமிழக அரசு பதவி உயர்வு வழங்கி உள்ளது.