மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் அகில இந்திய மார்வாடி இளைஞர் சங்கத்தின் சிவகாசி அமைப்பு சார்பில் 180 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கை, கால் உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று நடை பெற்றது. மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் தலைமை வகித்தார். அசோகன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார்.

இவ்விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கை, கால் உபகரணங்கள் வழங்கி பேசி யதாவது:

பொருளாதாரத்தில் பின்தங் கியவர்கள், விளிம்பு நிலையில் உள்ளவர்கள், வாய்ப்பு மறுக் கப்பட்டவர்கள் ஆகியோரை தேடிச் சென்று உதவி செய்வதுதான் உண்மையான சமூகப் பணியின் அடையாளம்.

அதை அவர்கள் அருகிலே இருந்து செயல்படுத்தியதோடு மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னோடி திட்டங்களை நிறைவேற்றித் தந்தவர் மறைந்த முதல்வர் கருணாநிதி.

இவர்களுக்கு தனது நேரடி கண்காணிப்பில் அத்திட் டங்களை செயல்படுத்தி வருபவர் முதல்வர் ஸ்டாலின். இதுபோன்ற பயனாளிகளை தனித்தனியாகக் கண்டறிந்து அவர்களுக்கு உதவி செய்ய தனியார் சமூக அமைப்பு கள் அரசுக்கு துணை நிற்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் வருவாய் அலுவலர் செந்தில்குமாரி மற்றும் அகில இந்திய மார்வாடி யூவா சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.