மழை பாதிப்பு பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமுதா ஐஏஎஸ், உள்ளிட்ட 4 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில், வெள்ளம் சூழ்ந்துள்ள இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து மழை நீரை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவை அடுத்து நிவாரணப் பணிகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்நிலையில், மழை பாதிப்பு பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமுதா ஐஏஎஸ், கார்த்திகேயன் ஐஏஎஸ் உள்ளிட்ட 4 அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிகாரிகள் விவரம்

தாம்பரம் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிவாரணப் பணிகளை ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் கண்காணிப்பார்.

சென்னை தெற்கு பகுதிக்கான அதிகாரியாக கோபால் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை வடக்கு பகுதிக்கு கார்த்திகேயன் ஐஏஎஸ், மத்திய சென்னை பகுதிக்கான அதிகாரியாக பன்கஜ் குமார் பன்சல் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here