வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை அதிகாலை சென்னை – புதுச்சேரி இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் நாளை தமிழகம் முழுவதும் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தொடர் கனமழை காரணமாக நாளை சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.