தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலேயே அதிக ரசிகர்களை கொண்ட ஒரே தென்னிந்திய நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்நிலையில் ரஜினிகாந்த் இன்னும் இரண்டு படங்களில் மட்டுமே நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினிகாந்த நடிப்பில் தற்போது aவரது 166 வது படமாக உருவாகியுள்ளது அண்ணாத்த. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. முத்து படத்திற்கு பிறகு ரஜினியுடன் அதிக நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் படம் ” அண்ணாத்த ” என கூறப்படுகிறது. படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்கிறார், முன்னணி நடிகை தங்கையாக நடிப்பதால் படம் நிச்சயம் அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்டது என்பதில் சந்தேகமில்லை. ரஜினியின் 166 வது படமான “அண்ணாத்த” இந்த வருடம் தீபாவளி அன்று திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது படத்துக்கான போஸ்ட் புரெடெக்ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் சூப்பர் ஸ்டாரை அடுத்து யார் இயக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு கோலிவுட்டில் எகிறியுள்ளது.இதற்கிடையே ரஜினியின் அடுத்த படத்தை யாரோ இளம் இயக்குநர் ஒருவருக்கு கொடுக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்க, அப்படியானால் இவரா? அவரா? என ஒரு பெரும் பட்டியலே இணையத்தில் சுற்றி வருகிறது. அடுத்த படத்தை இளம் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அல்லது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளதாகவும், இயக்குநரிடம் ரஜினி கதையை கேட்டுவிட்டதாகவும் கூறப்பட்டது. இன்னும் அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும் நிச்சயம் அவர் இளம் இயக்குநர் ஒருவரின் படத்தில்தான் நடிப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.
ரஜினியின் அடுத்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அண்ணத்த படத்திற்கு பிறகு இரண்டு படங்களில் மட்டுமே ரஜினி நடிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்குறிப்பிட்ட படத்தை தவிர்த்து , தனது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிக்க ரஜினிகாந்த பச்சைக்கொடி அசைத்ததாக அவருக்கு நெருக்கமான சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஜினிகாந்த நடிப்பில் கடைசியாக வெளியான படம் அவரின் மகள்கள் இயக்கிய படமாக இருக்க வேண்டும் என விரும்புகிறார் போலும். ஆனால் அந்த படம் பெரிய பட்ஜெட் படமாக இருக்க கூடாது, குறைவான முதலீட்டிலேயே எடுங்கள் என மகள்களிடம் அன்புக்கட்டளை விடுத்துள்ளாராம் ரஜினிகாந்த். முன்னதாக கொரோனா ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட சமயத்தில்,சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று வந்தார் ரஜினிகாந்த், அப்போது ரஜினியை பரிசோதித்த மருத்துவர்கள் , இனிமேல் உங்களுக்கு ஓய்வு தேவை என்றும் சண்டைக்காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தியதாக செய்திகள் வெளியானது. தனது உடல்நிலை காரணமாகத்தான் ரஜினிகாந்த் இத்தகைய முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரஜினி விரைவில் வெளியிடுவார் என தெரிகிறது.
#திரையுலகமேஅதிர்ச்சி..!“தமிழ்தாய்நாடுதந்தஅன்புபோதுமே”சினிமாவுக்கு‘குட் பை’சொல்கிறாராரஜினிகாந்த்? #Rajiniknath #Metro_People #News #Cinema