இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி நோட் 12 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரெட்மி நோட் 12, ரெட்மி நோட் 12 புரோ மற்றும் ரெட்மி நோட் 12 புரோ பிளஸ் என மூன்று போன்கள் இந்த சீரிஸில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.

சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது இந்திய சந்தையில் ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ரெட்மி நோட் 12 சீரிஸ் சிறப்பு அம்சங்கள்

  • மூன்று மாடல்களும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் இயங்குகிறது
  • இரண்டு ஆண்டுகள் ஆண்ட்ராய்ட் அப்டேட்டை கொண்டுள்ளது
  • 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது
  • ரெட்மி நோட் 12 5ஜி போனில் ஸ்னாப்டிராகன் 4 ஜெனரேஷன் 1 சிப்செட் உள்ளது
  • ரெட்மி நோட் 12 புரோ மற்றும் புரோ பிளஸ் போனில் மீடியாடெக் டிமான்சிட்டி 1080 சிப்செட் உள்ளது
  • மூன்று மாடல் போன்களிலும் பின்பக்கத்தில் மூன்று கேமராக்கள் உள்ளன. விலை மற்றும் மாடலை பொறுத்து பிரதான கேமராவின் பிக்சல் மாறுபடுகிறது
  • ரெட்மி நோட் 12 5ஜி போனின் விலையை பொறுத்தவரையில் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் திறன் கொண்ட போனின் விலை ரூ.17,999. 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் திறன் கொண்ட போனின் விலை ரூ. 19,999
  • ரெட்மி நோட் 12 புரோ 5ஜி போனை பொறுத்தவரையில் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் திறன் கொண்ட போனின் விலை ரூ. 24,999, அதுவே 8ஜிபி + 128ஜிபி போனின் விலை ரூ. 26,999 மற்றும் 8ஜிபி + 256ஜிபி போனின் விலை ரூ. 27,999
  • ரெட்மி நோட் 12 புரோ பிளஸ் 5ஜி போனை பொறுத்தவரையில் 8ஜிபி + 256ஜிபி போனின் விலை ரூ. 29,999. அதுவே 12ஜிபி + 256ஜிபி போனின் விலை ரூ. 32,999
  • இந்த போன்களை எம்ஐ.காம் மற்றும் ஆன்லைன் சந்தையில் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விலையில் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது