லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘ருத்ரன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்து, இயக்கி வரும் படம் ‘ருத்ரன்’. இதில் ப்ரியா பவானி சங்கர், நாசர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இன்று (ஆகஸ்ட் 26) ‘ருத்ரன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் எனப் படக்குழு அறிவித்தது. அதன்படி 2022-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி ‘ருத்ரன்’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். ‘ருத்ரன்’ வெளியாகவுள்ள ஏப்ரல் 14-ம் தேதி அன்றுதான் ‘கே.ஜி.எஃப் 2’ படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.