சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆவணி மாதம் மற்றும் ஓண பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டது.

கேரளாவில் கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த சில மாதங்களாகவே சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடும் நிபந்தனைகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. தொடர்ந்து இன்று முதல் 23ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். 19ம் தேதி முதல் ஓணம் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன. பின்னர் 23ம் தேதி இரவு நடை சாத்தப்படும்.

இதனால் சபரிமலையில் இந்தமுறை 8 நாட்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய முடியும். இந்த நாட்களில் தினமும் 15 ஆயிரம் பக்தர்களை மட்டுமே அனுமதிக்க தேவசம் போர்டு தீர்மானித்துள்ளது. இந்த முறையும் ஏற்கனவே உள்ள ஆன் லைன் முன்பதிவு மற்றும் 2 டோஸ் தடுப்பூசி அல்லது ஆர்டிபிசிஆர் நெகட்டிங் சான்றிதழ் விதிமுறைபடியே தரிசனம் செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.