கடந்த சனிக்கிழமை தங்களின் திருமண உறவு முடிவுக்கு வந்திருப்பதை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அறிவித்தனர் சமந்தாவும், நாக சைத்தன்யாவும்.

விவாகரத்து செய்திக்கு பிறகு வெளியில் வந்த சமந்தாவின் படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

படங்களில் ஒன்றாக நடித்து காதலில் விழுந்த சமந்தா – நாக சைத்தன்யா ஜோடி, கடந்த 2017, அக்டோபர் 7-ம் தேதி திருமணம் செய்துக் கொண்டது. கோவாவில் இவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது.

இந்து – கிறிஸ்டியன் என இரு முறைப்படியும் நாகசைத்தன்யா – சமந்தாவின் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் ஹீரோயினாக நடித்து வந்தார் சமந்தா. சமீபத்தில் இவரது நடிப்பில் ‘தி ஃபேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதற்கிடையே சமந்தா ட்விட்டரில் தனது பெயரை ‘எஸ்’ என மாற்றியதிலிருந்து, அவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வலம் வந்தன. ஆனால் இது குறித்து அவர்கள் இருவரும் வாய் திறக்கவில்லை. வெறும் வதந்தியாகவே இது முடிந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை தங்களின் திருமண உறவு முடிவுக்கு வந்திருப்பதை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அறிவித்தனர் சமந்தாவும், நாக சைத்தன்யாவும்.

இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கணவரை பிரிவதாக அறிவித்த பின் முதன் முறையாக சமந்தா வெளியில் வந்திருக்கிறார். அப்போது அவர் எடுத்துக் கொண்ட படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.